என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கிளென் மேக்ஸ்வெல்
நீங்கள் தேடியது "கிளென் மேக்ஸ்வெல்"
நேற்று நடைபெற்ற மும்பை, டெல்லி இடையிலான போட்டியில், மேக்ஸ்வெல் மற்றும் போல்ட் இருவரும் இணைந்து இரண்டு கேட்ச்கள் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர். #VIVOIPL #IPL2018 #DelhiDaredevils #GlennMaxwell #TrentBoult
புதுடெல்லி:
ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில், விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அசத்தினார். மற்றொரு டெல்லி வீரரான விஜய் சங்கர் 30 பந்துகளில் 43 ரன்கள் குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. அந்த அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் மும்பை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்தது.
இந்த போட்டியில் மும்பை அணி பேட்டிங் செய்த போது, சந்தீப் லமிசானே வீசிய பந்தை பொலார்டு சிக்சருக்கு அடிக்க முயன்றார். அந்த பந்தை டெல்லி அணி வீரர் மேக்ஸ்வெல் பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்து, பின்னர் பவுண்டரியைத் தாண்டுவதற்கு முன் சக வீரரான போல்ட்டிடம் பந்தை வீசினார். அந்த பந்தை போல்ட் கேட்ச் பிடித்ததன் மூலம் பொலார்டை அவுட் ஆக்கினர்.
அந்த கேட்சை தொடர்ந்து, ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவையும் அதேபோல் மேக்ஸ்வெல் மற்றும் போல்ட் இருவரும் ஒன்று சேர்ந்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கினர். முன்னதாக பஞ்சாப் அணியின் மனோஜ் திவாரி, மயன்க் அகர்வால் இருவரும் இணைந்து இதேபோன்று கேட்ச் பிடித்து ஸ்டோக்சை ஆட்டமிழக்க செய்தனர்.
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் பல வீரர்கள் சிறப்பான கேட்ச்கள் பிடித்திருந்தாலும் இந்த தொடரில் கிளென் மேக்ஸ்வெல், டிரெண்ட் போல்ட் ஜோடி இரண்டு முறை கேட்ச் பிடித்து அசத்தியுள்ளது. #VIVOIPL #IPL2018 #DelhiDaredevils #GlennMaxwell #TrentBoult
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X